காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுத் பிகாரி மீனாவின் இறுதி சடங்கு இரண்டு நாள் முன்பு நடந்தது. முகுத் பிகாரி மீனாவின் 5 மாத குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பெரிய அளவில் சண்டை நடந்து வருகிறது. குப்வாரா தொடர்ந்து திடீரென்று இந்திய ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது.