நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது. வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளார்.