வாட்ஸ் அப் மூலம் அதிக பணம் தருவதாக ஆசை காட்டி நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த இருவரை சென்னைப் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் நடிகை ஜெயலட்சுமி. பரத்தின் நேபாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பிரிவோம் சந்திப்போம் உள்பட 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரைத் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார்.
The chennai police have arrested two persons who tried to involve actress Jayalakshmi in to prostitution.