சுகாதாரத்துறை சாதனை அமைச்சர் பெருமிதம்

2018-07-14 1,170

புதிய மருத்துவக்கல்லூரி அமையவுள்ள மாவட்டங்களின் பரிசீலனையில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தொற்றுநோய் தடுப்பு முகாம் பயிற்சியினை துவக்கி வைப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிய வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சவிஜயபாஸ்கர் திருப்பூரில் வரும் ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலனையில் உள்ள மாவட்டங்களில் திருப்பூரும் உள்ளது . விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருப்பூரில் முதன்முறையாக தாய்ப்பால் வங்கி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்டவை 20.74 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது என்றதுடன் கடந்த ஓராண்டு மட்டும் 44 சிடி ஸ்கேன் , 18 எம்.ஆர்.ஐ ஸ்கேன் , 11 கேத் லேப் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறினார். இந்தியாவிலேயே சுகாதாரத்துறை முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது என்றதுடன் நீட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Tirupur district also has consideration of new medical colleges, said Vijayabaskar.

Videos similaires