மாணவிகளை தவறான வழியில் நடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள திருவாங்கூர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பல்கலை கழகத்தில் படிக்கும் மாணவிகளை தவறான வழியில் நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நிர்மலா தேவியும் அவருடன் சேர்ந்தவர்களும் பலமுறை நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐ போலீசார் இன்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
Des : The CBCIT police filed a case against Nirmala Devi's case for the professor who tried to mislead the students.