கட்சி தொடங்கியதும் கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில்தான் என்பதால் மய்யம் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர் என்று பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "கூட்டணி அமைக்க நாங்கள்தான் அழைக்க வேண்டும். கூட்டணி குறித்து பாஜகதான் முடிவு எடுக்க வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி என்பது கிடையாது. செப்டம்பரில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" என்று கூறினார்.
Tamilisai Soundararajan criticize on Friday that, actor Kamal Haasan fake rationalist because his makkal neethi mayyam party started and flag hosted in new moon day.