நிரம்புகிறது மேட்டூர் அணை...மகிழ்ச்சியில் மக்கள்- வீடியோ

2018-07-13 3,915

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது அணைக்கு 32 ஆயிரத்து 844 கன அடி நீர் வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 70 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் ஆடி பெருக்கிற்குள் அணையின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

des: Mettur Dam's water level is growing day by day and the farmers are happy.

Videos similaires