ஓபிஎஸ்- இபிஎஸ் பொம்மைகள்..லியோனி பேச்சு- வீடியோ

2018-07-13 2,081

அரசியலுக்கும் திரைபடத்திற்கும் எம்.ஜி.ஆரை கொண்டு வந்தது திமுக தலைவர் கருணாநிதி தான் என்று லியோனி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் நடுவராக திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் கதர் சட்டை அணிந்து காங்கிரஸ் கட்சியில் இருந்தார் கலைஞர் திமுகவில் இருந்தார் இருவரும் ஒரு திரைப்படம் தொடர்பான பணியில் கோவையில் தங்கி இருந்த போது ஒருவரை ஒருவர் தங்களது கட்சியில் இணைக்க முயற்சி செய்தனர். கலைஞர் காங்கிரஸ் கட்சிக்கு செல்லவில்லை எம்.ஜி.ஆர் தான் திமுகவிற்கு வந்தார் அதன்படி எம்.ஜி.ஆர் அரசியலுக்கும் திரைப்படத்திற்கும் கொண்டுவந்தது கலைஞர் தான் என்றார். தொடர்ந்து பேசுகையில் நரேந்திர மோடி என்ற ஒரு மந்திரவாதி இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ் இருவரையும் இரண்டு நூலில் கட்டி பொம்மலாட்ட போல் ஆட்டி வருகிறார். பன்னீர்செல்வம் மேலே சென்றால் எடப்பாடி கீழே சென்று விடுவார் ஆனால் இரண்டும் நூலில் தொங்கி கொண்டு இருக்கிறது என்றைக்கு அருந்து போகும் என தெரியாது என்றார்.

des: DMK chief M Karunanidhi's the politics that came with MG tiraipatattirkum Leone said.

Videos similaires