திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில்வே காலனியில் குடியிருக்கும் மேற்கு வங்கத்தைச்சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தென்னக ரயில்வேயில் சிக்னல் பிரிவில் பணிபுரிகிறார். இவரின் தாய் சாவித்திரி என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரையிலுள்ள வேளம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் சாவித்திரிக்கு திடீர் உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அருகிலுள்ள தனியார் கிளினிக்கில் சேர்க்கபட்டார். அப்பொழுது மருத்துவர் தர்மராஜ் செல் போனில் பேசியபடியே இருந்துள்ளதுடன் நோயாளிகளை கண்டு கொள்ளாததால் சாவித்திரி மருத்துவமனையிலே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த சாவித்திரின் உடலை மருத்துவர் உடனடியாக வெளியே கொண்டு செல்ல வேண்டும் என கூறி வெளியேற்றியுள்ளார். ஆம்புலன்ஸ் வரும் வரை சிறிது நேரம் அனுமதி கேட்டும் அனுமதிக்காமல் வெளியேற்றியதால் சாவித்திரியின் மருமகள் புவனேஷ்வரி மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.. மருத்துவரின் அஜாக்கிரதையால் சாவித்திரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.