ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ரஜினியை வைத்து இயக்குநர் ஷங்கர் மீண்டும் இயக்கும் படம் 2.0. இப்படத்தில் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு, நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.
Rajinikanth's 2.0 will open in theatres on November 29 this year, director Shankar Shanmugham confirmed in a tweet.