சந்தன மரம் வெட்டி கடத்தல்!

2018-07-11 421

கோவிலில் பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள நாற்பது ஆண்டுக்கும் மேற்பட்ட சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தேனி மாவட்டம் கம்பத்தின் மையப்பகுதியில் கம்பராயப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது இந்து அறநிலயத்துறைக்கு கட்டுபட்ட பொதுக்கோவில் ஆகும் இந்நிலையில் கம்பராயப்பெருமாள் திருக்கோவில் மேற்கு நுழைவாயில் தெற்கு பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த நாற்பது ஆண்டிற்கும் மேற்பட்ட பழைமையான சந்தன மரம் ஒன்றின் ஒரு பகுதியை நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கடத்திச்சென்றுள்ளனர். இன்று காலை கோவில் நிர்வாகக் கமிட்டியினர் சந்தன மரத்தை வெட்டி கடத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கோவிலில் சந்தன மரம் வெட்டப்பட்டு கடத்தியிருப்பது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The incidents of more than forty-year sandalwood worth Lakhs

Videos similaires