தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 23ஆம் தேதி 12 சிறுவர்கள் தங்களின் பயிற்சியாளருடன் தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக சென்றனர். அப்போது கனமழை கொட்டியதால் 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுற்றுலா சென்ற சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரால் குகையை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் தவித்தனர்.
Thailand cave: 12 boys and the coach have rescued safely. They were trapped in the cave on 23rd June.