சென்னை: 2015ஆம் ஆண்டு சென்னையை மூழ்கடித்த வெள்ளப் பெருக்குக்கு மனித தவறே காரணம் என இந்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள மேலாண்மை மற்sறும் வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 2015-ம் ஆண்டில் சென்னை, புறநகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 289 பேர் பலியானதோடு, 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அனைத்து வகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு சென்னை நகரம் பல நாட்கள் முடங்கியது.