இர்பான் பதான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இன்று கல்லூரி ஒன்றில் 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நடத்தப்பட்டது.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த இர்பான் பதானிடம் அவர் விளையாடியபோது வழிநடத்திய சிறந்த கிரிக்கெட் கேப்டன் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இர்ஃபான் பதான், அனைத்து கேப்டன்களுக்கு தனித்தன்மை உள்ளது என்றும், ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Under Ganguly's captaincy I got a new experience. Dhoni is Indian team's pillar- Irfan pathan