ஒபிஎஸ் தன்னை பழி வாங்குவதாக சசிகலா புஷ்பா குமுறல்-வீடியோ

2018-07-10 2

ஒபிஎஸ் , கோகுல இந்திரா , ராதாபுரம் MLA போன்றவர்கள் தன்னை அரசியலில் பழிவாங்கும் செயலில் ஈடுபடுகின்றனர். என்று மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாள்களிடம் பேசிய அவர் விவசாயிகளின் வயிற்றில் அடித்து ரோடு போடுவது முக்கியமா என்றும் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் போது இங்கு ரோடு போட முக்கியம் கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் . பசுமை வழிச்சாலையால் பலன் எடப்பாடிக்கு மட்டுமே என்றும் தனது கணவர் ஜாமின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.ஆதாரம் இருந்தும் போலீஸை வைத்து அரசு பழி பழிவாங்கும் செயல் மூலம் தூண்டுதலின் பேரில் நடவடிக்கை எடுக்கிறது என்று தெரிவித்த அவர் ஒபிஎஸ் , கோகுல இந்திரா , ராதாபுரம் MLA போன்றவர்கள் தன்னை அரசியலில் பழிவாங்கும் செயலில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார் .

Videos similaires