தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பல பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நெல்லையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் இரண்டு நாட்கள் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரில் உள்ள அவரது வீட்டில் குண்டு வீசப்பட்டது.