பாலாற்றில் மணல் கொள்ளையால் ஏற்பட்ட குட்டையில் குளிக்க சென்று 2 பள்ளி மாணவிகள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியினரை சேகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகள் கவிதாவும் அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவரின் மகள் தமிழ்செல்வி இருவரும் வாணியம்பாடி கோட்டை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் பாலாற்றின் ஓரம் மணல் திருடப்பட்டதால் ஏற்பட்ட குட்டை தண்ணீரில் மாணவிகள் இருவரும் குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற போது மாணவிகள் இருவரும் நீரில் மூழ்கினர். இதனை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடிச் சென்று சிறுமிகளை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் சிறுமிகள் நீரில் மூழ்கி இறந்தனர். பின்னர் சிறுமிகளின் உடலை அப்பகுதி பொதுமக்களும், வாணியம்பாடி தாலூகா போலீஸாரும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இத்தகவலை அறிந்து குழந்தைகளின் உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்து சிறுமிகளின் உடலை தூக்கிச் சென்று விட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.
இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேட்டூர் அருகே உள்ள கூணான்டியூர் நீர்பரப்பு பகுதிக்கு கார்திக் தங்கமணி உள்ளிட்ட 5 மாணவர்கள் குளிக்க சென்றனர். அப்போது அங்கிருந்த குட்டையில் கார்த்திக் மூழ்கி உயிரிழந்தார். கார்திக்கை காப்பாற்ற சென்ற தங்கமணியும் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து சக மாணவர்களும் அப்பகுதியினரும் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தெரியபடுத்தினர். தீயணைப்பினரும் போலீசாரும் உயிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.