தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளில் படிப்படியாக வசதிகள் அமைக்கப்படும்- செங்கோட்டையன்- வீடியோ

2018-07-07 14,291

தனியார் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட வசதிகளை போன்று அரசு பள்ளிகளில் படிப்படியாக அமைக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றார். தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களிலோ அல்லது பள்ளி முடிந்த பிறகோ நீட் தேர்வு குறித்த சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்மந்தப்பட்ட பள்ளிக்கான தடையில்லா சான்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Videos similaires