கல்லூரி நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து- வீடியோ

2018-07-06 1,758

தமிழைக் கழித்தால் இந்தியா கழிந்து விடும் என்று கவிஞர் வைரமுத்து கல்லூரி நிகழ்ச்சியில் ஆவேசமாக கூறினார்.

தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடைபெற்றது. அதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தியா என்பது 2 மொழி கலாச்சாரத்தில் ஆனது என்றும் வடக்கே சமஸ்கிருதம் தெற்கே தமிழ் என மூத்த அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, இந்தியாவின் இரு கண்களாக இரு மொழிகள் திகழ்ந்தாலும் சமஸ்கிருதம் வாழும் மொழி அல்ல தமிழ் மட்டுமே, வாழத்தக்க, வாசிக்க வசிக்கத் தக்கமொழி தமிழ் மட்டுமே எனவே, இணையத்தில் தமிழைக் கழித்தால் இந்தியா கழிந்து விடும் இதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாடு தமிழோடு சேர்ந்தது தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரீகம் நதிகரைகளில் பிறந்த நாகரீகம் நதிகளால் அழிவது ஆபத்து 3ம் உலகப்போர் தண்ணீரினால் நடக்கும் என்கிறார்கள் அது இந்தியாவில் துவங்கி விடக்கூடாது என்றார்.

Des : The poet Vireumuthu said that India would be late if Tamils spent.

Videos similaires