தீபாவளிக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கான ரயில் முன் பதிவு புக்கிங் கவுண்டர் திறந்த 10 நிமிடத்தில் அணைத்து டிக்கெட்டுகளும் விற்பணையானதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
வரும் நவம்பர் 6 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது,. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக தென்னக ரயில்வே டிக்கெட் முன்பதிவினை இன்று காலை தொடங்கியது. சென்னையில் இருந்து வெளி மாட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் முன் பதிவு ஆரம்பித்த 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பணையானதால் டிக்கெட் வேண்டி பலமணி நேரம் வரிசையில் நின்று காத்திருத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில மணித்துளிகளில் விற்பணை ஆனதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.