இராமேஸ்வரத்தில் எம்ஜிஆர் காலத்து துப்பாக்கி தோட்டாக்கள் அதிர்ச்சி தகவல்கள்- வீடியோ

2018-07-05 561

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் விடுதலை புலிகள் பயிற்ச்சி பெற்ற போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் குண்டுகள் தங்கச்சிமட மீனவர் வீட்டில் கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் மீனவர் அந்தையா . அவர் இறந்துவிட்ட நிலையில் அவரது மகன் எடிசன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 25ம் தேதி மாலை அவரது வீட்டின் அருகில் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காகக் குழி தோண்டியுள்ளார். அப்போது குழிக்குள் துருப்பிடித்த நிலையில் இரும்புப் பெட்டிகள் தென்பட்டுள்ளன. அவற்றை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் பல்வேறு வகையான ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்தன.



இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட போலீசார் இரும்பு பெட்டியை திறந்து பார்த்த போது அதில் பலவகையான துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 250 தோட்டாக்கள் கொண்ட 25 பெரிய இரும்புப் பெட்டிகள் மற்றும் எல்.எம்.ஜி, ஸ்டென்கன் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் அடங்கிய 25-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி காமினி, எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோர் போலீஸ் படையினருடன் துப்பாக்கிகள் கிடைத்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதுடன் மேலும் துப்பாக்கிகள் தோட்டாக்கள் ஏதேனும் உள்ளதா என்று விசாரணை செய்தனர். இது வரைக்கும் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட துப்பாக்கி குண்டுகள் போலிசாரால் மீட்கப்பட்டு மேலும் தீவிர சோதனையில் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர். 1983ல் அப்போதையை தமிழக முதல்வர் எம்,ஜி,ஆர் தமிழக கடற்கரையோரங்களில் விடுதலைபுலிகள் பயிற்சி எடுக்க அனுமதி கொடுத்ததாகவும், அதன் பின் 1986களில் அவர்களை வெளியேற உத்தரவிட்டதாகவும் அந்த நேரங்களில் புதைக்கப்பட்ட குண்டுகள் தான் தற்போது மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் துப்பாக்கிகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Videos similaires