இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி 101 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் டி-20 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி மான்செஸ்டரில் இன்று நடந்தது. இரண்டாவது டி-20 போட்டி, 6ம் தேதி இரவு 10 மணிக்கு கார்டிப்பில் நடக்கிறது. மூன்றாவது டி-20 போட்டி 8ம் தேதி இரவு 6.30 மணிக்கு பிரிஸ்டோலில் நடக்கிறது.
india vs england t20, india won by 8 wickets