தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம் புகார் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஜாகுவார் தங்கம் தலைவர் பதவியை ஏற்றார். ஆனால் அவரது அணியைச் சேர்ந்த மற்றவர்கள் வெற்றி பெறவில்லை. இதனால் ஜாகுவார் தங்கத்துக்கு, மற்ற பதவிகளில் இருக்கும் அவரது எதிரணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
The south Indian film and television producers guild president Jaquar Thangam filed a complaint in Chennai police commissioner that he has life threat.