தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் குழந்தைகளும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் சேலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டது. மழையினாலும் மின் தடை ஏற்பட்டததாலும் பொதுமக்களும் குழந்தைகளும் இரவு தூக்கம் இன்றி அவதிக்குள்ளாகினர்.
இதேபோல் சென்னை நகரில் நேற்று மாலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலையில் குரோம்பேட்டை பல்லாவரம், முகப்பேர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. நேற்று நள்ளிரவு சென்னை நகரில் மழை வெளுத்து வாங்கியது.
Des : Last night, heavy rains were reported in various districts of Tamil Nadu. This caused the public and children to suffer.