ஒற்றையானை நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவித்துள்ளனர்
ஏலகிரி மலைபகுதியில் ஒற்றையானை ஒன்று சுற்றி திரிகிறது. இதனால் மலைபகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவித்துள்ளனர் ,மேலும் இந்த ஒற்றையானை நிலாவூர்,சாலையில் நடந்து வந்த போது அதனை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் கிராம மக்களே அதனை விரட்ட முயற்சியும் மேற்கொண்டனர் இது ஜவ்வாது மலை பகுதியில் உள்ள யானைக்கூட்டத்திலிருந்து இந்த யானை பிரிந்து ஏலகிரி பகுதிக்கு வந்து அதிக சுற்றுலாபயணிகள் தங்கியுள்ள பகுதியில் இந்த யானை நடமாடுவதால் பொதுமக்களும் சுற்றுலாபயணிகளும் அச்சமடைந்துள்ளனர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தாலும் ஏலகிரி மலையில் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்களை யானை அழிக்கும் முன் அதனை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
des: The Forest Department has announced that tourists can be warned by walking away