பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், பிராமண குல துரோகி என்றும் கமலை கடுமையாக விமர்சித்துள்ளது.
உங்களுக்கு பிடித்த நூல் எது என டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு டுட்விட்டரிலேயே பதிலளித்த கமல், தன்னை மிகவும் பாதித்த நூல் 'பூணூல்' என்றார். மேலும், தான் தவிர்த்த நூலும் அதுதான் என்றும் குறிப்பிட்டார்.
Tamilnadu Brahmins council condemns Kamalhassan