குஜராத்தில் வாழும் 200 யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து அறிவிப்பு- வீடியோ

2018-06-29 1

குஜராத்தில் சொற்ப எண்ணிக்கையில் வசிக்கும் யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டுக்கு 6 நாள் பயணமாக விஜய் ரூபானி சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

குஜராத் வேளாண்துறை மேம்பாடு தொடர்பாகவும் விஜய் ரூபானி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில், குஜராத்தில் வாழும் யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Gujarat CM Vijay Rupani has announced that the Jews will be granted minority status.