புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி- வீடியோ

2018-06-29 457

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி இடஒதுக்கீட்டில் புதுச்சேரியை சார்ந்த மாணவர்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறி சமூக அமைப்பினர் ஜிப்மர் மருத்துவ கல்லூரியை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியிலுள்ள கோரிமேடு மற்றும் காரைக்காலில் மத்திய அரசின் கீழ் ஜிப்மர் மருத்துவமனை கல்லூரி இயங்கி வருகிறது. ஜிப்மர் மருத்துவ கல்லூரி 2018- 19 ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கையில் புதுச்சேரியை சார்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் துரோகம் இழைப்பதாக கூறியும்இ ஜிப்மர் மருத்துவமனையில் எழுத்தர் மற்றும் செவிலியர் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்தியதை கண்டித்து ஜிப்மர் வளாகத்தின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவ படிப்பிற்காக போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சி பி ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முற்றுகை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் கைது செய்யபட்டனர். வளாகத்தில் முன்பு சமூக அமைப்பினர் முற்றுகையிட்டதால் பாண்டிச்சேரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Videos similaires