நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறி மீனவர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்கச் கடலுக்கு சென்றனர். சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த பொழுது அங்கு வந்த இந்திய கடலோர பாதுகாப்பு படை போலிஸ்சார் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு படகில் இருந்த மீனவர்கள் சோதனைக்கு சரி வர ஒத்துழைக்காமல் இருந்தாக கூறப்படும் நிலையில் படகின் ஆவணங்களை எடுத்து வரும்படி கடலோர காவல்படை அதிகாரிகள் கேட்டதைத் தொடர்ந்து செல்வம் மற்றும் சத்தியராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் ஆவணங்களை எடுத்து சென்ற பொழுது அவர்களை கைது செய்த கடலோர காவல் படை காரைக்கால் மார்க் துறைமுகத்திற்க்கு அழைத்து வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலிஸ்சாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 2மீனவர்கள் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரனை செய்யப்பட்டு வருகின்றது.