ராணுவ மேஜரின் மனைவியை கொன்ற கையோடு மற்றொரு பெண்ணை ராணுவ அதிகாரி டேட்டிங் அழைத்த தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் இராணுவ மேஜர் அமித் திவிவேதி. இவரின் மனைவியான சைலஜா கடந்த சனிக்கிழமை டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மற்றொரு இராணுவ மேஜரான நிகில் ஹண்டாவை கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் பதுங்கி இருந்த போது ஹண்டாவை சுற்றி வளைத்து கைது செய்தனர் போலீஸ்.