கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏராளமானோர் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் கொடுக்க வந்து செல்வது வழக்கம்தான். ஆனால் நேற்று புகார் கொடுக்க இரண்டு பேர் வந்திருந்தது உண்மையிலேயே வித்தியாசமாகவும், அதிர்ச்சி தரும்படியாகவும் இருந்தது. காரணம், புகாரளிக்க வந்தவர்கள் ப்ரத்யூம்னா என்ற 15 வயது சிறுவனும், ஹேமந்தரா என்ற 10 வயது சிறுவனும் ஆவர். இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள். ஆனால் அதைவிட ஆச்சரியம் இவர்கள் யார் மேல் புகார் அளிக்க வந்தார்கள் என்பதில்தான்.