பட்டபகலில் காரில் சிறுவன் கடத்தல்- வீடியோ

2018-06-27 532

பட்டபகலில் சிறுவனை காரில் கடத்திய மர்ம கும்பல்
பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசார் இடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது


திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்த ரமேஷ் என்பவரின், ஏழு வயது சிறுவன் சந்தோஷ் குமார் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது ஒரு சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனிடம் பேச்சு கொடுத்து காரில் கடத்தி சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை பின் தொடர்ந்து சென்று, ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் பொதுமக்கள் காரை மறித்து, தர்ம அடி கொடுத்து விசாரித்தபோது, வந்தவர்கள் நால்வரும் போலீசார் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு பொது மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனை மீட்டு, கடத்திய இரண்டு பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வட மாநில கும்பலால் குழந்தை கடத்தல் என அச்சம் நிலவி வரும் வேளையில், போலீசார் என கூறி 7-வயது சிறுவனை ஸ்ரீரங்கம் பகுதியில் கடத்திய சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் என கூறி சிறுவனை கடத்திய மர்ம கும்பல் யார்? எதற்காக சிறுவனை கடத்தினர்? முன்விரோதமா என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Videos similaires