கடன் தொல்லையால் எலக்டரிக் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு
தேனியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் சிவக்குமார் எலக்டரிக்கல் கடை வைத்து உள்ளார். பாஸ்கரனின் சகோதரர் சௌந்தரபாண்டியனிடம் மகன் கார்த்திக் என்பவர் அதே ஊரைச்சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன் என்பவரிகளிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளர் அந்த கடன் தொகைக்கு பெரியப்பா பையன் என்ற முறையில் தனது சகோதருக்கு கார்த்திக்கு சிவக்குமார் வாய்மொழியாக ஜாமீன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வாங்கிய கடனை கார்த்திக் திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் வாய்மொழி ஜாமீன் கொடுத்த சிவக்குமாரை தொந்தரவு கொடுத்து உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று கடன் கொடுத்தவர்களுக்கு சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கடன் கொடுத்தவர்கள் சிவக்குமாரை மிகவும் தரக்குறைவாக பேசியதாக தெரிவிகிறது.இதனால் மனம் உடைந்த சிவக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைகாக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிவக்குமாரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன் என்பவரை இராயப்பன்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.