8 வழிபசுமை சாலையே தேவையில்லை அரசாங்கம் இதனை கவணிக்க வேண்டும் என்று வர்த்தக காங்கிரஸ் மாநிலதலைவர் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்தார்
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சேலம் சென்னை 8 வழிபசுமை சாலைக்காக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடாது ஏற்கனவே சேலத்தில் 2 சாலைகள் உள்ளது அதனை யாருக்கும் தொந்தரவின்றி விரிவாக்கம் செய்தாலே 8 வழிபசுமை சாலையே தேவையில்லை அரசாங்கம் இதனை கவணிக்க வேண்டும் 8 வழிபசுமை சாலைக்காக கனிம வளங்களை அழிக்க கூடாது மரங்களை வெட்டினால் அதே இடத்தில் மீண்டும் மரங்களை நட வேண்டும் என்றார். மேலும் ஜி.எஸ்டிக்கு பின்னர் சிறு குறுதொழில்கள் முற்றிலுமாக நசுக்கப்பட்டு அழிந்துவிட்டது அடுத்தமுறை பாஜக ஆட்சிக்கு வரலாம் என்று கணவு காண்கிறது அது நடக்காது என்று கூறினார்