மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ராமதாஸ் குறித்து அவதூறாக தான் எதையும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தொலைகாட்சி நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் குறித்து ராமதாஸ் மீது தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சென்னை பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்ததால் மோதல் ஏற்பட்டது