இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வாட்ஸ் அப் வதந்தி- வீடியோ

2018-06-25 10

மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 22 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வருட தொடக்கத்தில்தான் அந்த வாட்ஸ் ஆப் மெசேஜ் வலம் வர தொடங்கியது. பொதுவாக வாட்ஸ் ஆப்பில் என்ன வந்தாலும் அதை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு பார்வேர்ட் செய்யும் சிலர் அப்படியே பார்வேர்ட் செய்திருக்கிறார்கள்.

உங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது. பாதுகாப்பாக இருங்கள். சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் என்று அந்த வாட்ஸ் ஆப் வதந்தியில் இடம்பெற்றுள்ளது.

Videos similaires