உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் யோக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் அதிவிரைபடை வீரர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச யோக தினம் ஆண்டு தோறும் ஜுன் 21 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 4-வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் யோக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.