நீதிதுறை மீது அவ நம்பிக்கை ! வாசன் பரபர- வீடியோ

2018-06-18 234

18 MLA க்கள் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்பால் நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்



மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G. K. வாசன் 18 MLA க்கள் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்பால் நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது என்றும் 3வது நீதிமன்றம் உடனடியாக அமைத்து உரிய காலத்தில் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும். என்றார் காவிரி தண்ணீர் விவகாரங்களில் கர்நாடகவில் மழை பெய்து தண்ணீர் திறப்பது போல்.இயல்பாக மாதந்தோறும் நீர் திறக்க மத்திய அரசை மாநில அரசு வலியுருத்த வேண்டும் என்றார் . மேலும் காவிரி நீர் விவகாரத்தில் உரிய காலத்தில் நீர் வராததால் வறட்சியான டெல்டா விவசாயிகள் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு மற்றும் விவசாய அமைச்சகத்திடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் தெரிவித்தார்

Videos similaires