சென்னையில், பள்ளி சிறுவன் ஒருவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, பின் சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலையில் இப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட ராஜேஷ் என்ற 15 வயது சிறுவனை, போலீஸ் இவ்வளவு நாள் காணவில்லை என்று தேடி வந்தது.