ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர், சுஜாத் புகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் காஷ்மீர் போலீஸ் அதிர்ச்சியளிக்கும் வகையில் சிசிடிவி படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை கேட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வந்த சுஜாத் புகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று மாலை புகாரியை மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். அவர் அலுவலகம் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது சுடப்பட்டு இருக்கிறார்.