ரயிலின் மேற்கூரையில் இருந்தவாறு 1100 கிமீ பயணம் செய்த நாய்- வீடியோ

2018-06-11 3,125

ஹைதராபாத் ரயிலின் மேற்கூரையில் ஓடி விளையாடியவாறு, 1100 கிமீ தூரம் நாய் ஒன்று பயணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் சுற்றித் திரியும் நாய் ஒன்று, திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது விளையாட்டுத்தனமாக ஏறியுள்ளது. ஆனால், இதனை ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை. ரயில் வேகமாகச் செல்லத் தொடங்கியும் பயப்படாத அந்நாய், உற்சாகமாக ரயிலின் மீது ஓடி விளையாடியுள்ளது. ரயில் வேகமாகச் செல்லும் போது, இரு பெட்டிகளுக்கு இடையேயுள்ள பகுதியில் லாவகமாக அமர்ந்து கொண்ட நாய், பின்னர் ரயிலின் மேற்கூரையில் இங்கும் அங்கும் ஓடியுள்ளது.

A street dog that managed to travel from Hyderabad to Palakkad Olavakkode railway station standing on top of the train later became star of the day.

Videos similaires