தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனின் நீதிமன்ற காவல் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அக்கட்சியினர் தாக்கினர். இந்த வழக்கில் வேல்முருகன் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.