எனது பாரதம், பொன்னான பாரதம்.. கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி-வீடியோ

2018-06-08 521

எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் அகில இந்திய அளவிலான இளைஞர் பேரணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அமைதி, தூய்மை, யோகா மூலமாக அறநெறியை பேணி காக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். 'எனது பாரதம் பொன்னான பாரதம்' என்ற தலைப்பிலான இந்த பேரணி 2020-ம் ஆண்டு வரை பேருந்து மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Videos similaires