நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி- வீடியோ

2018-06-08 1

நீட் தேர்வால் விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி அவசர அவசரமாக அறிவித்த தேதிக்கு முன்னால் வெளியிடப்பட்டது.

இதில் தமிழகத்தில் இருந்து வெறும் 40% பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இதனால் மருத்துவம் படிக்கலாம் என்ற கனவில் இருந்த மாணவ மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ப்ளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வில் தகுதி பெறாததால் தற்கொலை செய்து கொண்டார்.

Videos similaires