ரஜினி படத்தை திரைப்படமாக பாருங்கள் என்று அறிவுரை கூறும் தமிழிசை, மெர்சல் படத்தை மட்டும் ஏன் திரைப்படமாக பார்க்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அவர் நடிப்பில் வெளியாகும் காலா திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் காலா படத்தை திரைப்படமாக பாருங்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கர்நாடக அமைப்புகளுக்கு அறிவுரை கூறியிருந்தார். ஆனால் விஜய்யின் மெர்சல் படம் வெளியான போது அதில் வரும் ஜிஎஸ்டி வசனங்களை நீக்குமாறு ஒற்றை காலில் நின்றவர்கள்தான் தமிழிசை, எச் ராஜா. இதை வைத்து நெட்டிசன்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
Netisans questions Tamilisai Soundararajan that Why she has not seen the Mersal as movie as she advises to see Kaala as a film.