தூத்துக்குடி துபாக்கி சூட்டில் இறந்த மேலும் ஆறு பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யபட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டதில் நடந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாகி சூட்டில் 13 பேர் பலியானார்கள் அதில் 7 பேரின் உடல்கள் உயர்நீதி மன்ற உத்தரவின் படி நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யபட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. இந்நிலையில் இன்று மேலும் ஆறு பேரின் உடல்கள் ஜிப்மர் மருத்துவனையில் இருந்து உடற்கூறு ஆய்வு நிபுணர் வினோத்குமார் தலைமையில் நிதிபதி முன்னிலையில் நடைபெற்றது .பிரேதபரிசோதனை முழுவதும் விடியோவாக பதிவு செய்யபட்டது பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது