ஒரு நிமிடம் சிந்திப்போம் , ஒரு 20 வருடங்கள் பின்னர் நமது கிராமங்களில் ஒன்றில் நமது சொந்த வயதானவர்களின் ஒருவர் நாம் யாரும் இல்லாத சூழலில் உடல்நிலை மோசமாக அவசரமாக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் தனக்கு என்ன செய்கிறதென்று மருத்துவரிடம் சொல்ல வேண்டிய ஒரு கட்டாயம். ஆனால் அங்கோ மருத்துவருக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்ற ஒரு நிலை, தனது மொழியில் எப்படி புரிய வைத்தும் அந்த மருத்துவருக்கு புரியவில்லை. என்ன செய்வார் அந்த முதியவர் ? அந்த நிலைமையில் உள்ளவர்களுக்கு என்ன செய்ய போகிறோம் நாம் ?
நீட்டினானால் ஏற்படப்போகும் பல பாதிப்புகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடைபெறும் சமயங்களிலும் ஒவ்வொரு வருங்கால மருத்துவர்களும் தனது உயிரை மாய்துகொண்டுள்ளனர் . அந்த சமயங்களில் நாமும் நமது எதிப்பை சில நாட்கள் வெளிப்படுத்துகிறோம் பின்னர் மறைந்து போகிறோம். இதுதான் இங்கு நடப்பது
ஒவ்வொரு வருடமும் மருத்துவ கலந்தாய்வில் போது தனது மகளின் கலந்தாய்விற்காக அந்த ஆளுக்கு துணியுடன் சென்னை மாநகரத்தை சுற்றி வரும் அந்த ஏழை கால்கள் இன்று சுடுகாட்டை சுற்றி வருகிறது
நீட் வெறும் அவர்களுக்கான பாதிப்பு மட்டுமல்ல நமக்கானதும் கூட. இட ஒதுக்கீட்டின் மேல் விழுந்த முதல் அடித்தான் நீட். அதன் கோரா பிடிக்கு அன்று அனிதா ஒன்று பிரதீபா தங்களது உயிரை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் ஒரே நடைமுறை அவசியம் அரசு கல்விக்கூடங்களிலும் தரமான கல்வியை வழங்கவேண்டியது தானே என்று கேள்வி எழுப்புவோரே.... இன்று தமிழகத்தில் இருந்து நீட் தேர்வில் முதல் 50 இடங்களில் இடம்பெற்ற ஒரே மாணவி கூறியது, நான் படித்த வெறும் சி.பி.எஸ்.சி. மட்டும் போதாது 2 வருட தனி கோச்சிங்கும் அவசியம் என்று கூறியுள்ளார். பெற்றோர்கள் மருத்துவர்களாக இருக்கும் அந்த மாணவிக்கு அது முடியும் , தனது உயிரை விடுத்த ஆதிதிராவிட மாணவி பிரதீபாவுக்கு சிறப்பு கோச்சிங் செல்ல அத்தனை லட்சங்கள் யார் கொடுப்பது ?
மீண்டும் ஒரு விஷயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் தமிழகத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரம் பேரில் வெறும் 330 பேர் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர் அப்படியெனில் அந்த 300 பேர் மட்டும் தான் உங்களது தரமான கல்வியில் படித்தவர்களா ? மேலும் பிளஸ்டூ தேர்வில் 500 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்வு பெறாத பீகார் தான் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது எனில் இந்த தேர்வு யாருக்கானது ?
உலகத்தரம் வாய்ந்த இந்த நீட் தெருவில்தான் அத்தனை பிழைகளும், சீட்டா என்பதற்கு பதில் தமிழில் சீதாவின் வேகத்தை பதிவு செய்க என்ற கேள்வி வேற ?
ஒன்று மட்டும் உறுதி , நீட் வெறும் மாய்ந்துபோன அந்த மாணவிகளின் எதிரி மட்டும் அல்ல நாளை நமது பிள்ளைகளின் எமனாகவும் வரலாம், எனக்கு கவலை இல்லை என்போர் வருங்காலங்களில் மருத்துவமனை செல்லும் முன் ஹிந்தி பயில்வது நல்லது.