நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். அதனால் சுமார் 1 லட்சம் மாணவர்களின் மருத்துவ படிப்பு பாழானது.