காற்றின் வழியே பறந்து வந்து..செவியில் விழுந்து..இதயம் விழுந்து..ராஜா!- வீடியோ

2018-06-02 2

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள்.. இன்று. ஏழு ஸ்வரங்களுமே அண்ணாந்து பார்க்கும் இசை பிரமாண்டம் இளையராஜா. ஒற்றைத் துணுக்கு காற்றின் வழியே பறந்துவந்து செவியில் நுழைந்தாலும் அந்த பாடலின் முழு பிம்பமும், ராகமும், காட்சியும் கண்முன்னே வந்து செல்லும் சாத்தியத்தை கொடுத்தது இளையராஜா மட்டுமே. இந்த அசாதாரண வெற்றிக்கு துவக்க புள்ளியினை விதைத்தது பாவலர் வரதராஜன். கால்நடை பயணங்களாய், மாட்டு வண்டி பயணங்களாய், அவர் போட்டு கொடுத்த இசைப்பாதையில் தலையில் ஹார்மோனிய பெட்டியை சுமந்து தடம் பதிக்க புறப்பட்டார் இளையராஜா. பாட்டு கேட்க ஆசையாக வைத்திருந்த ரேடியோவை விற்று சென்னைக்கு சகோதரர்களுடன் ரயில் ஏறி வந்த ராஜாவிடம், வருமானம் குறைவாக இருந்ததால், ராஜாவிடம் பணமே வாங்காமல் மேற்கத்திய இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் தந்த தன்ராஜ் மாஸ்டர் இளையராஜாவின் குருநாதராக என்றும் உயர்ந்து நிற்கிறார்.


Ilayaraja is one of India's best film musicians. He made his debut in the Tamil film industry in 1976 by setting music for Annakali. He has composed more than 1000 Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi films. He was awarded the Padma Bhushan Award for the third highest award at the Indian Government in 2010.


Music credits:

Relax by Simon More https://soundcloud.com/user-73416670
Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0
http://creativecommons.org/licenses/b...
Music promoted by Audio Library https://youtu.be/FTUkaPnYdLU

Videos similaires