கருணாநிதிக்காக தனது பிறந்தநாளை மாற்றிய இளையராஜா- வீடியோ

2018-06-02 5,842

#ilayaraja #happybirthday #karunanidhi #birthdate #change

The music director Isaignani Ilayaraja had changed his birthday for respecting DMK president. Today is Karunandhi and also Ilayaraja's birthday.

ஆண்டுதோறும் ஜூன் 2ம் தேதியே தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் இளையராஜா. காரணம் இது தான். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்ததினம் ஜூன் 3ம் தேதி. அரசியல், சினிமா, இலக்கியம் என பன்முக சாதனையாளரான கருணாநிதி மீது, அன்பும், மரியாதையயும் வைத்துள்ள இளையராஜா அவருக்காக தன் பிறந்ததினத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இது தொடர்பாக முன்பொரு பேட்டியில் அவர் கூறுகையில், "'ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்த நாள். அவர் தமிழுக்காற்றிய தொண்டில் சிறு பகுதியைக் கூட நான் செய்யவில்லை. அவர் பிறந்த நாளில் நானும் பிறந்தது பெருமை. ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரைத்தான் தமிழகம் வாழ்த்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். இன்று இளையராஜாவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் அந்த "இசைஞானி" பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தியவர் சாட்சாத் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Videos similaires